Friday 1 July 2011

சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!" :





"சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்."அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்" என்று கடந்த புதன்கிழமை (29.06.2011) தெஹ்ரானில் இடம்பெற்ற 28ஆவது சர்வதேச திருக்குர்ஆன் போட்டியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானிய அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

"பண்பாடற்ற ஸியோனிஸ சக்திகள் தம்முடைய குறுகிய நோக்கங்களின் பொருட்டு முழு மனித குலத்தையும் தங்களுடைய சுயநல சடவாத, பொருள் முதல்வாத சித்தாந்தங்கள் எனும் இரும்புச் சக்கரங்களின் கீழிட்டு காலங்காலமாக நசுக்கிவருகின்றன" என்று அஹ்மதி நிஜாத் சாடியுள்ளார்.

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையால் பலஸ்தீன் நிலங்கள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளமை, அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய மற்றும் ஈராக்கிய யுத்தங்களில் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை என்பன போன்ற துர்ப்பாக்கிய நிகழ்வுகள் அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்குச் சகாவான இஸ்ரேலும் ஒன்றிணைந்து தம்முடைய காலனித்துவ அடைவுகளுக்காக முழு மனித விழுமியங்களையும் பலிகொடுக்கத் தயாராக உள்ளமையைத் தான் நிரூபித்துள்ளன" என்று ஈரானிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

"இன்று உலகில் ஒரு குற்றச்செயல், ஊழல், சர்வாதிகாரம் என மனித இனத்தை இழிவுபடுத்தும் எந்த ஒன்றையேனும் கடந்துபோக நேர்கையில், அதன் பின்னணியில் ஸியோனிஸ இராச்சியமும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அவர்கள் எதனைக் காவு கொடுத்தேனும் தம்முடைய சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதில்தான் மும்முரமாக உள்ளனர். அதைத் தவிர, வேறு எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை" என்றும் ஈரானிய அதிபர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Thursday 12 May 2011

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் 31 முஸ்லிம் மாணவர்கள் வெற்றி

UPSC
புதுடெல்லி:இந்திய குடியுரிமை பணிகளுக்கான(சிவில் சர்வீஸ்) 2010 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளில் வெற்றிப்பெற்ற 920 மாணவர்களில் 31 பேர் முஸ்லிம் மாணவர்களாவர்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த திவ்யதர்ஷினி என்ற மாணவி இந்தியாவிலேயே முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் 3-வது,4-வது மற்றும் 8-வது ரேங்குகளை தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களே பெற்றுள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.
2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400பேர் தேர்ச்சி பெற்று,நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் முஸ்லிம் மாணவர்கள்.இதில் சதவீதம் 3.36 ஆகும்.இதில் தாரிக் 35-வது ரேங்கையும், மன்னான் அக்தர் 55-வது ரேங்கையும், மிர் முஹம்மது அலி 59-வது ரேங்கையும் பெற்றுள்ளனர். வெற்றிப் பெற்ற முஸ்லிம் மாணவர்களும் அவர்கள் பெற்ற ரேங்க் விபரமும் பின்வருமாறு:
Sl.No. Rank Roll No. Name
1. 35 033523 Tariq Thomas
2. 55 048876 Mannan Akhtar
3. 59 123121 Mir Mohammed Ali
4. 145 000113 Danish Ashraf
5. 169 071832 Mohammad Imran
6. 180 059148 Syed Abid Rasheed Shah
7. 187 351125 Zafar Ajmal Kidwai
8. 208 001032 Adil Khan
9. 226 020180 Mohammed Ali Shihab A
10. 245 004221 Abid Khan
11. 249 312359 Anam Benish
12. 266 392074 Posu Babu Alli
13. 306 037793 Ahtesham Ur Rahman Khan
14. 341 047571 Gulzar Ahmad Wani
15. 363 080609 Riyaz Iqbal
16. 404 284659 Ilyas K P A
17. 408 016973 Anjum Ara
18. 431 022617 N Mohammed Ali
19. 450 351154 Shaikh Aminkhan Yasinkhan
20. 460 159666 Syed Wasif Haider
21. 469 016500 Sahil Seth
22. 527 068608 Mohsina Tabassum
23. 572 320065 Ovessa Iqbal
24. 585 008447 Abid Hussain Sadiq
25. 611 011477 Ahmed Muyeen Farooq
26. 655 072429 Imran Ahmad Siddiqui
27. 737 330454 Mohd Yakoob Shekh
28. 740 332527 Jusuf Kabir Ansari
29. 794 000686 Mohd Aija
30. 795 320235 Shiraz Daneshya
31. 857 117036 Azhar Jamal